பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்ததாகக் கூறப்படும் சேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். பரமத்தி அருகே கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த சேகர், பேருந்து நிலையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டபோது, ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தி அவரைப் பிடித்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.