தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள், பஸ் ஸ்டாண்ட், கல்வி நிறுவனங்களுக்கு 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த 13 ஆம் தேதி முதல், நாமக்கல், ராசிபுரம், மோகனுார், குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் பத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாவட்டத்தின் மொத்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 159 ஆக குறைந்துள்ளது.