மாரியம்மன் திருவிழா பூவோடு இறக்குதல்

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் விநாயகர், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏப்ரல் 21 அன்று பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. தினமும் இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்படுகிறது. கடந்த 27 ஆம் தேதி கம்பம் நடுதல் விழா நடந்தது. இதில் அப்பகுதியினர் பெருமளவில் பங்கேற்று கம்பம் ஆட்டம் ஆடினர். கோவில் வளாகம் வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து விரதமிருந்து அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி