நாமக்கல்: சாலையைக் கடக்க முயன்றவர் கார் மோதி உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே திங்கள்கிழமை இரவு  லாரி உரிமையாளர் முத்துசாமி (55) இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதி உயிரிழந்தார். கரூரில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை மீட்டவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி