ஜேடர்பாளையத்தை அடுத்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் பிரவீன் (30), பரமத்தி வேலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார். நல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், தேர்தல் பறக்கும் படையில் ஈடுபட்டிருந்தார். புதன்கிழமை பணிக்குச் செல்லும்போது, பரமத்தி காவல் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளிய மரத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த பிரவீன், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.