வையப்பமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த கனமழை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் பரவலான கனமழை பெய்து வருகின்ற நிலையில் நாமக்கல் மாவட்டம் வையப்பமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக பலத்த கனமழை பெய்தது.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளான வையப்பமலை, ராமாபுரம், மோர்பாளையம், பருத்திபள்ளி, கருங்கல்பட்டி, சோமனப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி