உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்த கரூர் மாவட்டம், வேலாயுதபாளையம், புகலூர், நாமக்கல் ஆகிய மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் கடையைத் திறந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கண் கண்ணாடி கடை முழுவதும் எரிந்ததால் கடையில் இருந்த கண் பரிசோதனை இயந்திரம், கண் கண்ணாடிகள் என சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர், போலீசார் நடத்திய சோதனையில் மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.