சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் தனது தந்தை பூச்சி நாயுடு (71), தாய் சரசு, பூம்புகார் நகரை சேர்ந்த பரசுராம் மனைவி நிர்மலா ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நடத்தை அருகே சின்னசூரம்பாளையத்தில் உள்ள கோவிலுக்கு காரில் புறப்பட்டார்.
அப்போது கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்தி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த கார் டிரைவர் சென்னை சேர்ந்த ஜி. கே காலனி சேர்ந்த ஏழுமலை, பூச்சி நாயுடு, சரசு, ஜனார்த்தனன், நிர்மலா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் ஐந்து பேரையும் மீட்டு, நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பூச்சி நாயுடு உயிரிழந்தார். மேலும் டிரைவர் ஏழுமலை, நிர்மலா, ஜனார்த்தனன், சரசு ஆகிய நான்கு பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.