திமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஜேடர்பாளையத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் சரவணகுமார், தளபதி சுப்பிரமணி, சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. எஸ். மூர்த்தி, பரமத்தி வேலூர் சட்டமன்ற பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் பணிகளில் முகவர்களின் செயல்பாடு, மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர். இதில் ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக, இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி