இவர் வேலகவுண்டம்பட்டியில் உள்ள ராஜவேல் என்பவரது கட்டிட பணியில் இன்று (ஜூன் 13) ஈடுபட்டிருந்தார். இன்று காலை ராஜவேல் கட்டிடத்திற்கு தண்ணீர் விடும் பணியின்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி நவீன்குமார் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை கைப்பற்றிய வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நவீன்குமார் மனைவி 6 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் நேற்று தங்களது முதலாவது திருமண நாளையும் கொண்டாடியுள்ளனர். நவீன்குமார் உயிரிழப்பு அவரது குடும்பத்தாருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர் மின்அழுத்த கம்பி அடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என நவீன்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.