பரமத்தி: தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

பரமத்தி வேலூர் வட்டம், திடுமல் கவுண்டம்பாளையம் அருகே உள்ள செம்மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (60). இவரது கணவர் ஏற்கெனவே இறந்து விட்டதாலும், குழந்தைகள் இல்லாததாலும் லட்சுமி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், லட்சுமி தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர் ஞாயிற்றுக்கிழமை அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். புகாரின் பேரில், நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி