பரமத்தி வேலூர் பகுதியில் அடிக்கடி இரண்டு சக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் நேற்று (பிப்.18) காலை முதல் மாலை வரை தீவிர ஆய்வு மேற்கொண்டதில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பரமத்தி பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து அவர்களிடம் இருந்து 11 இரண்டு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.