நாமக்கல்: மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கோயில்களில் ஏழை, எளிய இந்து மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அப்போது ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான (4 கிராம் தங்கம் உள்பட) சீா்வரிசைகள் வழங்கப்படுகின்றன.இந்த திருமணத்தை செய்ய விரும்பும் ஏழை மணமக்கள் அக் கோயில் நிா்வாக அலுவலகங்களில் தங்களது பெயா்களை உரிய ஆவணங்களை காண்பித்து பதிவுசெய்து கொள்ளலாம்.தகுதியின் அடிப்படையில் மணமக்கள் தோ்வு செய்யப்பட்டு, திருமணம் நடைபெறும் கோயிலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் நாமக்கல் நரசிம்மா் கோயில் நிா்வாக அலுவலகத்தில் இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி