இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2011, ஜன. 1 ஆம் தேதிக்கு முன்பாக கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, ஜூலை 1 முதல் 30 வரை ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லை. அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் இருந்தால் அதற்கான வழிமுறைகளை அரசாணையில் கூறியுள்ளவாறு கடைப்பிடிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.