நாமக்கல்: பாத்திரம் விழுந்து குழந்தை பலி.. தாத்தா கைது

வெப்படை அருகே வேப்பங்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (44) மகள் மோனிஷா (20) தனது கணவர் மயிலானந்தம் (24) மற்றும் ஒன்பது மாத குழந்தை ஜோஸ்விக் உடன் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் தாய் வீட்டிற்கு வந்த மோனிஷாவிற்கும் தந்தை வெங்கடாசலத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை காலை ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, வெங்கடாசலம் வீசிய பாத்திரம் குழந்தை ஜோஸ்விக் மீது விழுந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. போலீஸார் வழக்குப் பதிந்து வெங்கடாசலத்தை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி