நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் சரிவு

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கோழிப் பண்ணையாளர்கள் முட்டை விலையை உயர்த்தக் கோரினர். இருப்பினும், இன்று முட்டை விலை 30 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று வரை ஒரு முட்டை 4 ரூபாய் 60 காசுகளாக இருந்தது. முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி