நாமக்கல் பூங்கா சாலையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று ஒன்பதாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சரின் வாக்குறுதியான 313ஐ உடனடியாக நிறைவேற்றக் கோரி, அவர்கள் மடி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.