நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் சுமார் 50 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று உழவர் சந்தைக்கு 132 விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்களை கொண்டு வந்தனர். நாமக்கல் நகரப் பகுதியில் வசிப்பவர்களில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர். இதன் மூலம் 22 லட்சத்து 730 ரூபாய் விற்பனை ஆனது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.