நாமக்கல்: மூதாட்டிடம் செயின் பறித்த இரண்டு பேர் கைது

பள்ளிப்பாளையம், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி, (90); கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்தார். நேற்று காலை வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான கோகுல்ராஜ், (19), தாமோதரன், (31), ஒரு சவரன் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்ததுத் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மூதாட்டி சரஸ்வதி வீட்டருகே காலியிடத்தில் கோகுல்ராஜ் மது குடித்தபோது, மூதாட்டியின் தோடையைப் பறிக்க வீட்டிற்குள் சென்று, அவரைக் கீழே தள்ளி, கையால் முகத்தைப் பொத்தி, மூச்சுத்திணறவைத்து கொலை செய்ததுத் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி