குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், ஐயப்பன் மற்றும் ஞானசம்பந்தம் ஆகிய இருவர் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.