குமாரபாளையம் தொகுதியில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றி பெற்றார். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக த.வெ.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற இந்தத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் தி.மு.க. சார்பில் பாலு உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.