குமாரபாளையம்: வட்ட வழங்கல் அலுவலகம் இடமாற்றம்

குமாரபாளையம் தாலுக்கா அலுவலக வளாகத்தில், வட்ட வழங்கல் அலுவலகம் முதல் தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 

குமாரபாளையம் தாலுக்கா அலுவலத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் 2வது தளத்தில் அமைந்திருந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் படி ஏறி வர, பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புதிய ரேசன் கார்டில் ஆதார் பதிவு, உள்ளிட்ட சில விபரங்கள் கேட்கவும், அதனை சரி செய்து கொண்டு வந்து விண்ணப்பிக்கவும் பல முறை, வட்ட வழங்கல் அலுவலகம் வர வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளதால், வட்ட வழங்கல் அலுவலகம் தரை தளத்தில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் பலனாக, மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படி, வட்ட வழங்கல் அலுவலகம் தற்போது, குமாரபாளையம் தாலுக்கா அலுவலக முதல் தளத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி