வெப்படை: லாரி பேட்டரி திருடிய வாலிபர் கைது

பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான லாரியில் இருந்து பேட்டரியை திருடிய தீபன் (23) கைது செய்யப்பட்டார். வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து பேட்டரியை திருடி டூவீலரில் தப்ப முயன்றபோது, ஜெகதீஷ் மற்றும் சிலர் அவரை துரத்திப் பிடித்து வெப்படை போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி