இதனால் அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை டாக்டர் வசம் சொல்ல முடியாமலும், டாக்டர் சொல்வது நோயாளிக்கு புரிந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது. உள் நோயாளிகளாக இருப்பவர்கள், பிரசவ வழியில் அட்மிட் ஆனவர்கள், குழந்தை பிறந்து சிகிச்சை பெற்று வருபவர்கள், பிறந்த குழந்தைகள் உள்பட அனைவரும், ஒலிபெருக்கியின் சத்தத்தால் பெறும் அவதிக்கு ஆளாகினர். இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால், அரசியல்வாதிகள் தங்கள் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்துவார்கள்.
அரசு மருத்துவமனை பகுதியில், மற்றும் இதர தனியார் மருத்துவமனை பகுதிகள் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய கட்டுப்பாட்டினை மாவட்ட நிர்வாகம் அவசியம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.