பள்ளிபாளையம்: அரசு அலுவலகங்களில் ஒயர் திருட்டு

பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் உள்ள களியனூர் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், சமுதாய கூடம், விபிஆர்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகிய ஐந்து அலுவலகங்களின் மின் மீட்டர் வயர்கள் ஏப்ரல் 7 இரவு திருட்டு போனது. காலையில் அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்கள் மின்சாரம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மின்கம்பத்தில் ஆய்வு செய்தபோது வயர்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி