குமாரபாளையம் வட்டமலை பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி மணிகண்டன் (33), நவம்பர் 25 இரவு 8:15 மணியளவில் சேலம்-கோவை புறவழிச்சாலையில் கே.ஓ.என். தியேட்டர் பிரிவு அருகே டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, ஹோண்டா யூனிகார்ன் டூவீலரில் வந்த சதீஷ்குமார் (53) என்பவர் மோதியதில் மணிகண்டன் படுகாயமடைந்தார். இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான சதீஷ்குமாரை கைது செய்தனர்.