குமாரபாளையம் பகுதியில் அதிக அளவு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டதில் அந்த வழியாக வந்த காரை சோதனை செய்து அதில் ரூ.22 லட்சம் மதிப்பிலான 266 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்ட போலீசார் அந்த காரின் வந்த வடமாநில நபர் ஹன்குமார் என்பவரை பிடித்து விசாரணை செய்து அவரிடம் இந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.