இதன் மூலம் இரண்டு மாவட்ட மக்களின் நீராதார பிரச்னைக்கு தீர்வு காணப்படும். பரமத்திவேலூர் சுற்றியுள்ள பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். வெற்றிலை விவசாயத்தை நம்பி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை பரமத்திவேலூர் பகுதியில் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வெற்றிலை விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளின் நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசு, வெற்றிலை விவசாயம் நலனை காக்கும் வகையில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் மாதேஸ்வரன் எம்.பி., தெரிவித்துள்ளார்.