குமாரபாளையத்திலிருந்து பவானி செல்லும் வாகனங்கள் டீச்சர்ஸ் காலனி எதிரில் உள்ள புறவழிச்சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த இணைப்பு சாலை பல்லாங்குழி போல குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலையை புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.