பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் கிட்னி திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து புரோக்கர்கள் ஆனந்தன் மற்றும் ஸ்டாலின்மோகன் ஆகியோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கொடுத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அளித்த தகவலின்பேரில் புரோக்கர் முத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.