ம. நீ. ம. மகளிரணி நிர்வாகிகளுக்கு விருதுகள்

மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமலஹாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் மத்திய மாவட்டம் தலைமை கமலஹாசன் நற்பணி இயக்கம், சிவகாசி மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டன. இதில் தண்ணீர் தொட்டி திறப்பு, ரத்த தான முகாம், மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவு, ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள், மாணவர்களுக்கு சீருடை, நோட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், சமூக சேவை செய்த நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, மல்லிகா, மதுரை பத்மாவதி, உமையாள், ஜோதிமணி, சுகுணா மற்றும் சிவகங்கை, பாண்டிச்சேரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மகளிர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி