நிசார் செயற்கை கோள் ஏவுதளத்தில் பங்கேற்ற குமாரபாளையம் மாணவர்

குமாரபாளையம், நிசார் செயற்கை கோள் ஏவுதளத்தில் நாமக்கல் மாவட்ட அளவில் குமாரபாளையம் மாணவர் ஒருவர் மட்டும் பங்கேற்றார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் நிசார் செயற்கை கோள் நேற்று அனுப்பப்பட்டது. இந்த நிகழ்வு சம்பந்தமாக பள்ளி மாணவர், மாணவர்களுக்கு இடையே ஆன்லைனில் கோவை சக்தி பொறியியல் கல்லூரி சார்பில், வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் நிசார் செயற்கை கோள் அனுப்பப்படும் நிகழ்விற்கு, இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவித்தார்கள். 

இதில் குமாரபாளையம் ஐன்ஸ்டீன் மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் எஸ். பரத்குமார் பங்கேற்று வெற்றி பெற்றார். இவர் நேற்று முன்தினம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டார். நேற்று நடந்த ராக்கெட் ஏவுதளத்தில் நிசார் செயற்கை கோள் அனுப்பப்படும் நிகழ்வில், நாமக்கல் மாவட்ட அளவில் ஒரே ஒரு மாணவராக எஸ். பரத்குமார் மட்டும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்ட அளவில் பரத்குமார் பங்கேற்று, மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவர் பரத்குமாரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி