குமாரபாளையம்: பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலிருந்து ராசிபுரம் சென்ற தனியார் பேருந்தில், வட்டமலை நிறுத்தத்தில் ஏறிய வாலிபர் ஒருவர் பள்ளக்காபாளையம் அருகே படிக்கட்டில் நின்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பதறவைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி