நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசின் தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த சிஐடியு, ஏஐடியுசி, எச்.எம்.எஸ்., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.