குமாரபாளையம்: கமலுக்கு மநீம மகளிரணியினர் வாழ்த்து

எம். பி. யாக தேர்வு செய்யப்பட்ட கமலுக்கு ம. நீ. ம குமாரபாளையம் மகளிரணியினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தி. மு. க. கூட்டணி சார்பில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமலஹாசன், எம். பி. யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. 

இதில் மாநிலம் முழுவதிலிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்று, கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, ஒன்றிய செயலர் மல்லிகா தலைமையிலான குழுவினர் நேரில் சென்று கமலுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள். கட்சி சார்பில் பொதுமக்களுக்கு செய்த சேவைகள் குறித்த விபரங்கள் அடங்கிய குறிப்பேட்டினை கமல் வசம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி