நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவேல் உள்ளிட்டோர் நேற்று(செப்.5) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவிரி பாலத்தில் சதீஷ்குமார் என்பவர் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடமிருந்து 20 பீர் பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.