குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியில், இந்து சமத்துவ மயான பாதுகாப்பு கமிட்டி கூட்டம் சமூக ஆர்வலர் வக்கீல் தங்கவேல் நடைபெற்றது. கூட்டத்தில் சத்யாபுரி, சுந்தரம் நகர், திருவள்ளூர் நகர், குளத்துக்காடு, ஓலப்பாளையம், காமராஜர் நகர், வேதாந்தபுரம், கோட்டைமேடு, கோட்டைமேடு காலனி, எதிர் மேடு, தட்டாங்குட்டை ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது, இந்து மக்களை திரட்டி மயான பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான ஆலோசனை கூட்டம் நடத்துவது, விரைவில் நடைபெறவுள்ள ஆர். டி. ஓ. தலைமையிலான சமாதான கூட்டத்திற்கு பிரதிநிதிகளை அதிக அளவில் அனுப்பி வைப்பது, என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வக்கீல் தங்கவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் ராஜா, மூர்த்தி, சேகர், சண்முகம், ரஜினி, ராமகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.