இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு , மற்றொரு விவசாய நிலத்தில் வாழைத்தார் ஏற்றுவதற்காக வியாபாரி சுரேஷ் தனக்கு சொந்தமான தோஸ்த் வாகனத்தில் வந்திருந்த பொழுது அவரை சுற்றி வளைத்த விவசாயிகள், வாகனத்தை பறிமுதல் செய்து பணத்தை கொடுத்தால் மட்டுமே வாகனத்தை திருப்பி தர முடியும் என தெரிவித்தனர்.
இது குறித்த புகார் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் எங்களுக்கு உரிய பணம் கிடைக்காத பட்சத்தில் எவ்வாறு நீங்கள் நாங்கள் சிறைபிடித்த வாகனத்தை அந்த வியாபாரிடம் ஒப்படைக்கலாம் எனக் கூறி பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.