குமாரபாளையத்தில் உள்ள சேலம் சாலையில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். வருகின்ற மே மாதம் சித்திரா பௌர்ணமி அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள பாமக மாநாட்டிற்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.