91. 14 சதவீதம்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் 91. 14 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வினை 271 பேர் எழுதினர். இதில் 247 பேர் தேர்ச்சி பெற்று, 91. 14 சதவீதம் தேர்ச்சி எனும் இலக்கை பெற்றுள்ளனர். சந்தோஷ்-, 471, தரணி 469, சோமசுந்தரம் 462, அருண்பிரசாத் 462 என முறையே மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஆடலரசு மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ரவி, மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் அன்பரசு, பொருளாளர் சுப்ரமணியம், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஸ்ரீதேவி, கவுன்சிலர் அழகேசன் உள்ளிட்ட பலர் வாழ்த்தினார்கள்.