பள்ளிப்பாளையம் நகராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு ஒரு அறிவிப்பை, நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: பள்ளிப்பாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய, 2024-25ம் ஆண்டின் இரண்டாம் அரை ஆண்டிற்கான சொத்து வரியை, வரும், 31க்குள் செலுத்துபவர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை, பள்ளிப்பாளையம் நகர பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனடியாக செலுத்தி பயன்பெற கேட்டுக்கொள்கிறோம். மேலும், இணையதளம் வாயிலாகவும், நகராட்சி கணினி சேவை மையத்திலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை தொகை ஆகியவற்றை உடனே செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.