நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு முட்டையின் விலை தற்போது ₹6.70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற மண்டலங்களில் நிலவும் சந்தை மாற்றங்கள் மற்றும் தேவைக் குறைவு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் நாட்களில் முட்டை விலை மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.