நாமக்கல் மண்டலத்தில், முட்டை ஒன்றின் விலை பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6ஆக நிர்ணயம் செயப்பட்டுள்ளது. இங்கு தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், கடந்த 5 நாள்களில் 25 காசுகள் விலை உயர்ந்து முட்டை கொள்முதல் விலை ரூ.6ஆக நிர்ணயம் செயப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.