சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) மருத்துவர்களின் அதி தீவிர கண்காணிப்பில் உள்ளதாக சென்னை ராஜீவ்காந்த் அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 20 நாள்களுக்கும் மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவரும் நிலையில், தற்போது அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.