நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு.. தவெக ராஜ்மோகன் பதிலடி

தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தவெக நிர்வாகி ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசியல் பொதுவெளியில் இதுபோன்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும். பதிலுக்கு பதில் இதுகுறித்து பேசுவது நன்றாக இருக்காது. பொதுவாக அவர் அப்படி பேசக்கூடியவர் அல்ல. எங்கள் தலைவரின் வளர்ச்சியை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் உளறி இருக்கிறார்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி