தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பு

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் 13-வது மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும், மாநில தலைவருக்கான சான்றிதழையும் அவர் பெற்றுக்கொண்டார். பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் தருண் சுக், கிஷன் ரெட்டி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி