நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இன்று (நவ.28) முதல் 30-ம் தேதி வரை, மன்னார்குடி எக்ஸ்பிரஸில் 2 தூங்கும் வசதி பெட்டிகளும், காரைக்கால் எக்ஸ்பிரஸில் 2 பொது பெட்டிகளும் கூடுதலாக சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.