வேதாரண்யத்தில் உப்பளங்களில் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள்

வேதாரண்யம் பகுதியில் பெய்த தொடர் கனமழையால் ஒன்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கடல் நீரும் உப்பளங்களுக்குள் புகுந்ததால், உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உப்பளத் தொழிலாளர்கள் தேங்கியுள்ள நீரில் வலை வீசி மீன்பிடித்து வருகின்றனர். வேதாரண்யம் தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி