உற்பத்தி செய்யப்பட்ட உப்பு விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரம்

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த அகத்தியன் பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு உற்பத்தி முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. உற்பத்தி செய்யப்பட்ட உப்பினை அம்பாரம் அமைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உப்பினை பாதுகாப்பாக விற்பனைக்கு அனுப்பும் பணியில் உப்பள உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சமையல் உப்பு மூட்டைகளாகவும், பத்து ரூபாய் பாக்கெட்டுகளாகவும் பேக்கிங் செய்யப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி