நாகை: சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள், பொலிரோ வாகனம் மோதியதில் ராணுவ வீரர் உள்பட இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். வேதாரண்யம் கீழசேது ரஸ்தா பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (31). ஏரிமேல்கரை பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் பாலகுமாரன் (24) ராணுவ வீரர். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். 

நண்பர்கள் இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு நாகை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் திரும்பிக் கொண்டிருந்தனர். தேத்தாகுடி- வடக்கு புதூர் பகுதியில் வேதாரண்யத்திலிருந்து நாகைக்குச் சென்ற பொலிரோ வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கார்த்திக், பாலகுமாரன் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி